Friday, February 29, 2008

எழுத்தாளர் சுஜாதா மரணம்

கடந்த புதன்கிழமை இரவு எழுத்தாளர் சுஜாதா இயற்கை எய்தினார். 20 ம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாற்றில் தன்னிகரற்ற உச்சத்தைத் தொட்டவர். BEL இல் பொறியாளராக பணியாற்றி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தவர். இலக்கியத்தில் சிறுகதை, நாவல், அறிவியல் தொலைநோக்கு கதை (Science Fiction), அறிவியல், நாடகம், திரைக்கதை, வசனம் என பல நடைகளிலும் கலக்கியவர்.
ஆனந்த விகடன், குமுதம், கல்கி ஆகியவற்றை வாங்கிய உடன் முதலில் நான் படிப்பது சுஜாதாவின் எழுத்துக்கள் ஆகத் தான் இருக்கும். தமிழ் இலக்கிய உலகில் அவர் விட்டு சென்ற இடம் நிரப்பப்படுவது கடினம்.
Tamil writer Sujatha (Originally Rangarajan) died on Wednesday night in Chennai. He was 72. One of my favorite writers in Tamil, he straddled across different genre of writing including short stories, novels, science, science fiction, plays, screenplay and dialogues. He was Dr.APJ.Abdul Kalam's classmate in St. Joseph's college, Trichy. He worked as an electronics engineer in BEL, Bangalore, wherein he was a key member in the team that created the Electronic Voting Machine.
Everyweek i used to start reading Kumudam, Ananda Vikatan and Kalki from the pages written by Sujatha. He has left behind a void which is very difficult to fill in the Tamil literary world.

No comments: